சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.

ENG vs IND, 3rd Test: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய 9ஆவது வீரர் எனும் சாதனையை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஜேமி ஸ்மித் 51 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக இந்த மைல் கல்லை எட்டிய 9ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள்
- 956 - அனில் கும்ப்ளே (501 இன்னிங்ஸ்)
- 765 - ரவிச்சந்திரன் அஷ்வின் (379 இன்னிங்ஸ்)
- 711 - ஹர்பஜன் சிங் (444 இன்னிங்ஸ்)
- 687 - கபில் தேவ் (448 இன்னிங்ஸ்)
- 611 - ரவீந்திர ஜடேஜா (422 இன்னிங்ஸ்)
- 610 - ஜாகீர் கான் (379 இன்னிங்ஸ்)
- 551 - ஜவகல் ஸ்ரீநாத் (348 இன்னிங்ஸ்)
- 462 - முகமது ஷமி (254 இன்னிங்ஸ்)
- 452* - ஜஸ்பிரித் பும்ரா (246 இன்னிங்ஸ்)
இதுதவிர்த்து இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜோ ரூட்டின் விக்கெட்டையும் ஜஸ்பிரித் பும்ரா கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 11 முறை ஜோ ரூட்டின் விக்கெட்டை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார்.
ஜோ ரூட் விக்கெட்டை அதிகமுறை கைப்பற்றிய வீரர்கள் (டெஸ்டில்)
- 11* - ஜஸ்பிரித் பும்ரா (27 இன்னிங்ஸ்)
- 11 - பேட் கம்மின்ஸ் (31 இன்னிங்ஸ்)
- 10 - ஜோஷ் ஹேசில்வுட் (31 இன்னிங்ஸ்)
- 8 - மிட்செல் ஸ்டார்க் (31 இன்னிங்ஸ்)
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
Also Read: LIVE Cricket Score
Win Big, Make Your Cricket Tales Now