Advertisement

அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!

சர்வதேச கிரிக்கெட்டில் சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.

Advertisement
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 14, 2025 • 02:13 PM

Jasprit Bumrah Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 14, 2025 • 02:13 PM

லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானதுடன் ஸ்கோரையும் சமன்செய்தது.

இதனால் முன்னிலை ஏதுமின்றி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 40 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி 192 ரன்களிலேயே ஆல் அவுட்டானதுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன்மூலம் சேனா நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியவில் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

முன்னதாக அனில் கும்ப்ளே 139 இன்னிங்ஸ்களில் 219 விக்கெட்டுகளை கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ஜஸ்பிரித் பும்ரா 109 இன்னிங்ஸ்களில் 221 விக்கெட்டுகளை கைப்பாற்றி புதிய சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முகமது ஷமி 113 இன்னிங்ஸ்களில் 218 விக்கெட்டுகளை கைப்பற்றி மூன்றாம் இடத்திலும், முன்னாள் வீரர் ஜவகல் ஸ்ரீநாத் 113 இன்னிங்ஸ்களில் 212 விக்கெட்டுகளை வீழ்த்தி நான்காம் இடத்திலும் உள்ளார். 

சேனா நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்

  • 221* - ஜஸ்பிரித் பும்ரா (109 இன்னிங்ஸ்)
  • 219 - அனில் கும்ப்ளே (139 இன்னிங்ஸ்)
  • 218 - முகமது ஷமி (113 இன்னிங்ஸ்)
  • 212 - ஜவகல் ஸ்ரீநாத் (126 இன்னிங்ஸ்)
  • 211 - கபில் தேவ் (140 இன்னிங்ஸ்)
  • 198 - ஜாகீர் கான் (108 இன்னிங்ஸ்)

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர். 

Also Read: LIVE Cricket Score

இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.    

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement