BGT 2024-25: ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த ஜஸ்பிரித் பும்ரா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாஅவது இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது அற்புதமான பந்துவீச்சின் மூலம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்படி இந்த இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா 24.4 ஓவர்களில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் மூன்றாவது முறையாக அவர் ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த வகையில் இத்தொடரில் இதுவரை நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் 12.83 சராசரியில் 30 விக்கெட்டுகளை ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு இந்திய பந்துவீச்சாளராக, பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Trending
இதற்கு முன் கடந்த 2013ஆம் ஆண்டில் 29 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில் அவரைத் தற்போது பும்ரா பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இதுதவிர இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, ஒரு வருடத்தில் அதிக சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் மூன்று வடிவங்களிலும் சேர்த்து 85 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு, பும்ரா மூன்று வடிவங்களிலும் சேர்த்து 86 விக்கெட்டுகளை வீழ்த்தி அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், ஜாகீர் கான் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்
- 100 விக்கெட்டுகள் - கபில் தேவ் (1983)
- 89 விக்கெட்டுகள் - ஜாகீர் கான் (2002)
- 86 விக்கெட்டுகள் - ஜஸ்பிரித் பும்ரா (2024)
- 85 விக்கெட்டுகள் - இர்பான் பதான் (2004)
- 82 விக்கெட்டுகள்- வெங்கடேஷ் பிரசாத் (1996)
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து ஜஸ்பிரித் பும்ரா இந்த ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓராண்டில் 70 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 1979ஆம் ஆண்டில் டெஸ்டில் 74 விக்கெட்டுகளையும், 1983ஆம் ஆண்டில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now