‘உலக கோப்பையில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது’ - ஜஸ்ப்ரித் பும்ரா!
உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உள்ளது.
இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்து இத்தொடரில் பங்கேற்க தயாராக இருக்கின்றனர். அதே வேளையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது.
Trending
இன்னும் சில தினங்களில் ஆஸ்திரேலியா சென்றடையும் இந்திய அணியானது அங்கு பயிற்சி போட்டியிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அந்த தகவலினை உறுதி செய்யும் விதமாக தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா அதிகாரவபூர்வமாக இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறுகிறார் என்று உறுதியான தகவலை வழங்கி உள்ளது.
இந்த தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி இந்திய அணிக்கு பெரிய பின்னடைவையும் தந்துள்ளது. மேலும் பும்ராவிற்கான மாற்று வீரர் யார் என்பதனை அறிவிக்காத பிசிசிஐ விரைவில் அவருக்கான மாற்று வீரரையும் அறிவிக்கும் என்று தெரிகிறது.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, ட்விட்டரில் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
Comeback Stronger, Boom! #Cricket #IndianCricket #TeamIndia #JaspritBumrah #T20WorldCup pic.twitter.com/ZFaqUe13Vr
— CRICKETNMORE (@cricketnmore) October 4, 2022
இதுகுறித்து பும்ரா தனது ட்விட்டர் பதிவில், “இந்தமுறை டி20 உலகக் கோப்பை தொடரில் நான் பங்குபெறாதது மிகுந்த வேதனையைத் தருகிறது. என்னுடைய அன்பானவர்களிடமிருந்து கிடைத்த ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. ஆஸ்திரேலியாவில் விளையாடும் இந்திய அணிக்கு ஆதரவாக நான் இருப்பேன்” என்று கூறியுள்ளார். இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now