
இந்திய அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் ப்ந்துவீச்சு துறையை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார். பும்ரா தற்போது டெஸ்ட் தரவரிசையில் நம்பர்-1 பந்துவீச்சாளராக உள்ளார், மேலும் தற்போது அபாரமான ஃபார்மிலும் உள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் ஜஸ்பிரித் பும்ரா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
அந்தவகையில், இந்தத் தொடரில் பும்ரா மேலும் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் எனும் ரவிச்சந்திரன் அஸ்வினை (58 விக்கெட்டுகள்) முந்தி புதிய சாதனையைப் படைப்பார். அத்துடன் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலகளவில் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.