
ஐபிஎல் தொடரின் 18ஆவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமின்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனானது இதுவரை சிறப்பானதாக அமையவில்லை.
ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அந்த அணி தற்சமயம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்த அணியின் இந்த நிலைக்கு ஜஸ்பிரித் பும்ராவும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. பும்ரா, கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் காயம் அடைந்தார். அதன் பின்னர் அவர், எந்தவிதமான கிரிக்கெட் போட்களிலும் பங்கேற்கவில்லை.
மேற்கொண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சமீபத்தில் பந்துவீச்சு பயிற்சியையும் மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் முழு உடற்தகுதியை எட்டாத காரணத்தால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான அனுமதியை பிசிசிஐ வழங்காமால் இருந்தது. இதனால் அவர் இத்தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிட்டார். இந்நிலையில் தான் பும்ராவுக்கு உடற்தகுதி சான்றிதழை பிசிசிஐ வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது.