
இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவி விட்டது. இந்நிலையில் ராஜ்கோட் நகரில் இன்று தொடங்கிய கடைசி போட்டியில் ஒய்ட்வாஷ் செய்யும் முறைப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் கமின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகிய முக்கிய வீரர்கள் திரும்பினார்கள்.
அதன் பின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரி 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியாக விளையாடினார்.
அதை விட மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் மிட்சேல் மார்ஷ் வேகமாக ரன்களை குவித்து 2ஆவது விக்கெட்டுக்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 96 (84) ரன்களில் இருந்த போது குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய அவரை தொடர்ந்த மறுபுறம் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 74 (61) ரன்கள் குவித்து சவாலை கொடுத்த ஸ்மித்தை சரியான நேரத்தில் எல்பிடபுள்யூ முறையில் காலி செய்த சிராஜ் தம்மை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார்.