-mdl.jpg)
Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 7 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்யவுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 20)நடைபெறவுள்ளது. மேலும் உலக டெஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக இப்போட்டி நடைபெறவுள்ளதால் இப்போட்டியின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். அந்தவகையில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 7 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை பூர்த்தி செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 9ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெறுவார்.