
Jasprit Bumrah set to be ruled out of entire New Zealand series, first two Tests vs Australia: Repor (Image Source: Google)
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. இந்திய அணிக்காக 30 டெஸ்டில் 128 விக்கெட்டும், 72 ஒருநாள் ஆட்டத்தில் 121 விக்கெட்டும், 60 டி20 போட்டியில் 70 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.
தற்போது 29 வயதான பும்ரா காயத்தால் சர்வதேச போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் உள்ளார். அவர் கடைசியாக டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் ஜூலை மாதமும், டி20 போட்டிகளில் செப்டம்பர் மாதமும் விளையாடி இருந்தார்.
காயத்தில் இருந்து முழு குணம் அடைந்ததால் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.