ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், இஷான் - ஜெய் ஷா பதில்!
இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை ஒப்பந்த பட்டியளில் இருந்து நீக்கும் முடிவை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தான் எடுத்தார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய சீனியர் ஆடவர் அணிக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இதில் வழக்கம்போல் ஏ+, ஏ, பி மற்றும் சி என நான்கு பிரிவுகளுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அணியின் இளம் வீரர்கள் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டு பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் கிரேட் பி பிரிவிலும், இஷான் கிஷான் கிரேட் சி பிரிவிலும் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியது. காரணம் இவர்கள் இருவரும் இந்திய அணியில் இடம்பெறாம் இருந்த நிலையில் அவர்களை பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடும் படி கேட்டுக்கொண்டது.
Trending
ஆனால் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்த இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து ஐபிஎல் தொடருக்காக பயிற்சி மேற்கெண்டதும், ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்ததன் காரணமாக கோபமடைந்த பிசிசிஐ அவர்கள் இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கெண்டதன் விளைவாகவே தற்போது ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் இதுகுறித்த கேள்வி பதிலளித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “நீங்கள் அரசியலமைப்பை சரி பார்க்கலாம். இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை ஒப்பந்த பட்டியளில் இருந்து நீக்கும் முடிவை தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் தான் எடுத்தார். அவர்கள் இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அவர்களை நீக்கியது அவருடைய முடிவு. செயல்படுத்தியது மட்டுமே என்னுடைய வேலை.
மேலும் சஞ்சு சாம்சன் போன்ற புதிய வீரர்களையும் நாம் பெற்றுள்ளோம். புதிதாக இணைக்கப்பட்ட வீரர்கள் தவிர்க்க முடியாதவர்கள். அதே போல வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு நான் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஸ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாட தயாராக இருப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இந்தியாவுக்காக விளையாட அதற்கு தகுந்த உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now