இந்திய அணியை பாரட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஷா!
இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. அதன்படி பார்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதன்மூலம் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பிறகு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை டெல்லி வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவெற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நேரில் அழைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் மும்பை வந்தடைந்த இந்திய அணி வெற்றி அணிவகுப்பையும் மேற்கொண்டது.
Trending
அதன்படி இந்திய வீரர்கள், அணியின் பயிற்சியாளர்கள், பிசிசிஐ உறுப்பினர்கள் என அனைவரும் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்திய படி திறந்தவெளி பேருந்தில் மும்பை நரிமண் முனையில் இருந்து வான்கடே கிரிக்கெட் மைதானம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட பேரணியும் நடத்தப்பட்டது. அதன்பின் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்ட ரூ.125 கோடிக்கான காசோலையை பிசிசிஐ செயலாளர் ஜொய் ஷா வழங்கினார்.
It was an absolute pleasure to meet and interact with the Honourable Prime Minister of India Shri Narendra Modi Ji at his official residence upon our arrival from Barbados. Prime Minister Sir has stood by #TeamIndia through ups and downs and has always encouraged the team to give… pic.twitter.com/Bv61l1r4Ik
— Jay Shah (@JayShah) July 5, 2024
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா தனது எக்ஸ் பதிவில், “மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியை பார்படாஸில் இருந்து வந்தவுடன் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர், ஏற்றத் தாழ்வுகளில் இந்திய அணிக்கு ஆதரவாக நின்று, இறுதி முடிவைப் பொருட்படுத்தாமல், சிறந்ததைச் செய்ய அணியை எப்போதும் ஊக்குவித்து வருகிறார்.உலகக் கோப்பை வெற்றி நாடு முழுவதும் பரவச அலையை கொண்டு வந்து ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடய செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று பதிவுசெய்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now