ஐசிசியின் முக்கிய பொறுப்பை ஏற்கும் ஜெய் ஷா!
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐசிசி நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
பிசிசிஐ செயலாளராக இருந்துவரும் ஜெய் ஷாவுக்கு ஐசிசியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா.
பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டார் ஜெய் ஷா. கடந்த அக்டோபருடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், மீண்டும் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் ஜெய் ஷா.
Trending
ஆனால் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் முடிந்தவுடன் விலகினார். பிசிசிஐ புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரோஜர் பின்னியுடன் இணைந்து ஜெய் ஷா செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில், ஜெய் ஷாவுக்கு ஐசிசியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுகிறது. ஐசிசி நிதி மற்றும் வணிக விவகார குழுவின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளார். அவர் விரைவில் அந்த பொறுப்பை ஏற்கிறார். இந்த பொறுப்பில் இருந்துவரும் ரோஸ் மெக்கல்லம் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், நிதி விவகார குழுவின் அடுத்த தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்கிறார்.
ஐசிசி நிதி மற்றும் வணிக விவகார குழு, ஐசிசி பட்ஜெட் ஒதுக்கீடு, ஐசிசி-யின் உறுப்பினர் நாடுகளுக்கு பணத்தை விநியோகம் செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்கிறது. அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும் பணம் விநியோகம் செய்யும் ஐசிசியின் முக்கியமான பொறுப்பை ஜெய் ஷா ஏற்கவுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now