ரஞ்சி கோப்பை 2023: உனாத்கட், சகாரியா அபாரம்; வலிமையான நிலையில் சௌராஷ்டிரா!
பெங்கால் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா அணி வலிமையான நிலையில் உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பெங்கால் அணியும், சௌராஷ்டிரா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றும் வரும் இறுதி ஆட்டத்தில், டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணியில் இடம்பெற்று இருந்த ஜெய்தேவ் உனாட்கத், சௌராஷ்டிரா அணிக்காக களமிறங்கி அசத்தினார். உனாட்கட் தனது அனுபவத்தையும், திறமையையும் இன்றைய ஆட்டத்தில் வெளிப்படுத்தி பெங்கால் அணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
Trending
ஆசிய ஆடுகளத்தில் கூட இப்படி பந்துவீச முடியுமா என்பதை உனாட்கட் இன்று செய்து காட்டினர்.உனாட்கட் பந்தின் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு பெங்கால் பேட்ஸ்மேன்களால் பதில் சொல்ல முடியவில்லை.
இதே போன்று, இளம் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் சூக்கரியா அபாரமாக பந்துவீசியதால் , பெங்கால் அணி பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புக்காக காத்திருந்த பெங்கால் அணியின் அபிமன்யூ ஈஸ்வரன் டக் அவுட் ஆனார்.
மற்றொரு தொடக்க வீரர் சுமந்த் குப்தா 1 ரன்னிலும், சுதீப் குமார் டக் அவுட்டாகியும், கேப்டன் மனோஜ் திவாரி 7 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் 34 ரன்கள் சேர்ப்பதற்குள் பெங்கால் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஷாபாஸ் அகமது மற்றும் அபிசேக் போரேல் ஆகியோர் பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
அபிசேக் பாரேல் 50 ரன்களிலும், ஷாபாஸ் அகமது 69 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, பெங்கால் அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சௌராஷ்டிரா அணியில் சேத்தன் சுக்கரியா, ஜெய்தேவ் உனாட்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஜெய் கொஹில் 6 ரன்களிலும், விஸ்வராஜ் ஜடேஜா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் 38 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் சௌராஷ்டிரா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களைச் சேர்த்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now