
Jaydev Unadkat released from India’s squad for 2nd Test to take part in the finals of the Ranji Trop (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார். ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் செளராஷ்டிரா அணிக்காக உனாத்கட் விளையாடுவதால் விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி சார்பில் சிராஜ், ஷமி, உமேஷ்யாதவ், ஜெயதேவ் உனாட்கட் ஆகிய 4 வேகப்பந்து பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் ஜெயதேவ் உனாத்கட் விடுவிக்கப்பட்டுள்ளார்.