ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை சமன்செய்த ஜெஸ் ஜோனசன்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜெஸ் ஜோனசன் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் தனித்துவ சாதனை படைத்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்ம், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் தலா 22 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் தர்பபில் ஜெஸ் ஜோனசன், மின்னு மணி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளமிட்டனர்.
Also Read
இதில் ஷஃபாலி வர்மா 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுமுனையில் அபாரமாக விளையாடிய மெக் லெனிங் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரங்கனை ஜெஸ் ஜோனசன் ஆட்டநாயகி விருதை வென்றார். இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் அதிக முறை ஆட்டநாயகி விருதை வென்ற வீராங்கனை எனும் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 முறை ஆட்டநாயகி விருதை வென்ற நிலையில், தற்போது ஜெஸ் ஜோனசனும் 5 முறை ஆட்டநாயகி விருதை வென்று அசத்தியுள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
டபிள்யூபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகி விருதை வென்றவர்கள்
- 5 - ஹர்மன்பிரீத் கவுர்
- 5 - ஜெஸ் ஜோனசன்*
- 4 - மரிசான் கேப்
- 4 - நாட் ஸ்கிவர்-ப்ரண்ட்
Win Big, Make Your Cricket Tales Now