எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த ஜித்தேஷ் சர்மா!
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் 6ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக ரன்களை சேர்த்த வீரர் எனும் சாதனையை ஜித்தேஷ் சர்மா படைத்துள்ளார்.

லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதுடன், புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டி ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 123 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஜோடி சேர்ந்த மயங்க் அகர்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜித்தேஷ் சர்ம 85 ரனகளையும், மயங்க் அகர்வால் 40 ரன்களையும் சேர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதில் 6வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த ஜிதேஷ் 33 பந்துகளில் 257.58 ஸ்ட்ரைக் ரேட்டில் 85 ரன்கள் எடுத்தார், அதில் அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களை அடித்தார். மேலும் இது அவரது முதல் ஐபிஎல் அரைசதமாகவும் அமைந்தது. இந்நிலையில் இதன் மூலம் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் 6ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே பேட்டிங் செய்து அதிக ரன்களை சேர்த்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக சிஎஸ்கே அணி கேப்டன் எம் எஸ் தோனி, கேகேஆர் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல், மும்பை இந்தியன்ஸின் கீரன் பொல்லார்ட் உள்ளிட்டோர் 6 அல்லது அதற்கு கீஇழ் பேட்டிங் செய்து 70 ரன்களை எடுத்திருந்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் தான் ஜித்தேஷ் சர்மா அவர்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 85* - ஜிதேஷ் ஷர்மா vs எல்எஸ்ஜி, 2025*
- 70* - எம்எஸ் தோனி vs ஆர்சிபி, 2018
- 70* - ஆண்ட்ரே ரஸ்ஸல் vs பிபிகேஎஸ், 2022
- 70 - கீரோன் பொல்லார்ட் vs ஆர்சிபி, 2017
- 68 - டுவைன் பிராவோ vs எம்ஐ, 2018
இதுதவிர்த்து ஐபிஎல் வரலாற்றில் 6வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்களை அடித்த இரண்டாவது வீரர் எனும் எம் எஸ் தோனியின் சாதனையையும் ஜித்தேஷ் சர்மா முறியடித்துள்ளார். முன்னதாக தோனி கடந்த 2019ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிராக 84 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் தற்போது ஜித்தேஷ் சர்மா 85 ரன்களைச் சேர்த்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸின் ஹர்திக் பாண்டியா 91 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
- 91 - ஹர்திக் பாண்ட்யா vs KKR, 2019
- 85* - ஜிதேஷ் சர்மா vs LSG, 2025*
- 84* - எம் எஸ் தோனி vs RCB, 2019
Also Read: LIVE Cricket Score
இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ரிஷப் பந்தின் சதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் ஜித்தேஷ் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 85 ரன்களைச் சேர்க்க, ஆர்சிபி அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now