
Joe Root becomes England's most successful Test captain (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி டிராவில் முடிய, இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதேசமயம் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். இந்த வெற்றி இங்கிலாந்து கேப்டனாக ஜோ ரூட்டுக்கு 27ஆவது வெற்றியாகும்.