சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக 3000+ ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் படைத்துள்ளார்.

Joe Root Records: இந்திய அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் அரைசதம் கடந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணியானது 153 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 4000 ரன்கள்
இப்போட்டியில் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் இங்கிலாந்து தரப்பில் இந்த சாதனையைப் படைத்த முதல் வீரர் மற்றும் உலகளவில் நான்காவது வீரர் எனும் சாதனைகளைப் பதிவுசெய்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் மட்டுமே இதனை செய்துள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள்
- 4795 - ரிக்கி பாண்டிங்
- 4563 - மஹேலா ஜெயவர்தன
- 4287 - குமார் சனக்கரா
- 4001 - ஜோ ரூட்*
- 3968 - ஸ்டீவன் ஸ்மித்
- 3927 - சனத் ஜெயசூர்யா
சர்வதேச டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்கள்
இது தவிர, இந்த அரிசதத்தின் மூலம் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக தனது 3000 டெஸ்ட் ரன்களையும் பூர்த்தி செய்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். இது தவிர, டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த ஒன்பதாவது வீரர் எனும் பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
டெஸ்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள்
- 5028 - டான் பிராட்மேன் vs இங்கிலாந்து
- 3636 - ஜாக் ஹாப்ஸ் vs ஆஸ்திரேலியா
- 3630 - சச்சின் டெண்டுல்கர் vs ஆஸ்திரேலியா
- 3548 - ஆலன் பார்டர் vs இங்கிலாந்து
- 3417 - ஸ்டீவ் ஸ்மித் vs இங்கிலாந்து
- 3269 - டேவிட் கோவர் vs ஆஸ்திரேலியா
- 3214 - கேரி சோபர்ஸ் vs இங்கிலாந்து
- 3200 - ஸ்டீவ் வா vs இங்கிலாந்து
- 3000 - ஜோ ரூட் vs இந்தியா
டெஸ்டில் அதிக அரைசதங்கள்
மேற்கொண்டு இப்போட்டியில் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக 50+ ரன்களை இரண்டாவது வீரர் எனும் சாதனையை சமன்செய்துள்ளார். இதுவரை ரூட் 103 முறை 50+ ஸ்கோரைப் பதிவுசெய்து இந்த சாதனையைப் பதிவுசெய்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 119 முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்து முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 50+ ரன்கள் (இன்னிங்ஸ்)
- 119 - சச்சின் டெண்டுல்கர் (329)
- 103 - ஜோ ரூட் (284)*
- 103 - ஜாக் காலிஸ் (280)
- 103 - ரிக்கி பாண்டிங் (287)
- 99 - ராகுல் டிராவிட் (286)
- 96 - ஷிவ்நரைன் சந்தர்பால் (280)
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஷோயப் பசீர்.
Also Read: LIVE Cricket Score
இந்திய பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
Win Big, Make Your Cricket Tales Now