
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நவம்பர் 28ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 93 ரன்களையும், கிளென் பிலீப்ஸ் 58 ரன்களையும் சேர்த்தனர், இங்கிலந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ், சோயப் பஷீர் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தின் மூலம் 499 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 171 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மேலும் இங்கிலாந்து அணி 151 ரன்கள் முன்னிலையும் பெற்றது.