சச்சினின் சாதனையை உடைத்த ஜோ ரூட்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 11ஆயிரம் ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2ஆவது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. குறிப்பாக விரைவில் பரம எதிரி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த போட்டியில் இங்கிலாந்து களமிறங்கியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி லண்டனில் இருக்கும் உலக புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்துக்கு ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக ஜேக் மெக்கோலம் 36 ரன்களும் குட்டீஸ் கேம்பர் 33 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டூவர்ட் ப்ராட் 5 விக்கெட்களும் ஜேக் லீச் 3 விக்கெட்களும் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து கத்துக்குட்டியான அயர்லாந்து போல பவுலர்களை அதிரடியாக எடுத்துக்கொண்டு முதல் இன்னிங்ஸை 524/4 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. குறிப்பாக மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த வருடம் இந்தியா, தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளை அடித்து நொறுக்கி வெற்றி வாகை சூடிய அதே ஸ்டைலை இந்த போட்டியிலும் இங்கிலாந்து தொடர்ந்தது.
Trending
அந்த ஸ்டைலில் 109 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த அணியின் ஓப்பனிங் ஜோடியில் ஜேக் கிராவ்லி 56 ரன்களும் பென் டன்கட் சதமடித்து 24 பவுண்டரி 1 சிக்ஸருடன் 182 ரன்களை விளாசினார். அவர்களை 3ஆவது இடத்தில் களமிறங்கி அட்டகாசமாக பேட்டிங் செய்த ஓலி போப் அயர்லாந்து பவுலர்களை துவம்சம் செய்து இரட்டை சதமடித்து 22 பவுண்டரி 3 சிக்ஸருடன் 205 ரன்கள் விளாசினார். அவருடன் அசத்திய நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 56 (59) ரன்கள் எடுத்தார்.
இப்போட்டியில் அதிரடியாக 56 ரன்கள் எடுத்த ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை கடந்த 2வது இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ரன்களை மிகவும் இளம் வயதில் எடுத்த 2ஆவது வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார்.
- அலஸ்டர் குக் : 31 வருடம் 357 நாட்கள்
- ஜோ ரூட் : 32 வருடம் 154 நாட்கள்*
- சச்சின் டெண்டுல்கர் : 34 வருடம் 95 நாட்கள்
- ரிக்கி பாண்டிங் : 34 வருடம் 210 நாட்கள்
- ஜேக் காலிஸ் : 34 வருடம் 245 நாட்கள்
Win Big, Make Your Cricket Tales Now