சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி நேற்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்தது. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவிய நிலையிலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். அவர் இப்போட்டியில் 111 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 120 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் அவர் 2084 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்துள்ளார். முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அவர் தனது கடைசி ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்திருந்தார்.
Trending
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்
இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் தற்போது எட்டாவது இடத்தை எட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது 53வது சதமாகும், மேலும் அவர் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாமபவான் பிரையன் லாராவின் சாதனையையும் சமன்செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள்
- 100 - சச்சின் டெண்டுல்கர்
- 82 - விராட் கோலி
- 71 - ரிக்கி பாண்டிங்
- 63 - குமார் சங்கக்கார
- 62 - ஜாக் காலிஸ்
- 55 - ஹாஷிம் ஆம்லா
- 54 - மஹேலா ஜெயவர்த்தனே
- 53 -ஜோ ரூட்
- 53 - பிரையன் லாரா
அதிவேகமாக 53 சர்வதேச சதங்கள்
இது தவிர, சர்வதேச அளவில் அதிவேகமாக 53 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரூட் ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளார். அவர் தனது 473ஆவது இன்னிங்ஸில் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 355 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டி முதலிடத்திலும், தென் ஆப்பிரிககவின் ஹாஷிம் அம்லா 380 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல்லை எட்டி இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக 53 சர்வதேச சதங்கள் (இன்னிங்ஸ்)
- 355 - விராட் கோலி
- 380 - ஹாஷிம் ஆம்லா
- 390 - சச்சின் டெண்டுல்கர்
- 438 - ரிக்கி பாண்டிங்
- 473 - ஜோ ரூட்*
ரோஹித் சர்மா சாதனை சமன்
இதுதவிர்த்து ஒருநாள் போட்டிகளில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை இலக்காகக் கொண்டு துரத்தும்போது அதிக சதம் அடித்த வீரர்கள் அடிப்படையில் ரூட் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது ஐந்தாவது சதமாகும். இதன்மூலம் அவர் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஜேசன் ராய் ஆகியோரின் சாதனைகளை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 9 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
300+ சேஸ் செய்யும் போது அதிக ODI சதங்கள்
- 9: விராட் கோலி (35)
- 5:ஜேசன் ராய்(22)
- 5: ஜோ ரூட் (25)
- 5: ரோஹித் சர்மா (32)
- 4: ஃபகார் ஜமான் (17)
- 4: ராஸ் டெய்லர் (18)
- 4: குமார் சங்கக்காரா (35)
Win Big, Make Your Cricket Tales Now