
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமக ரூதர்ஃபோர்ட் 70 ரன்களையும், குடகேஷ் மோட்டி 63 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் 64 ரன்களையும், பென் டக்கெட் 58 ரன்களையும், ஜோ ரூட் 44 ரன்களையும், ஜோஸ் பட்லர் 41 ரன்களையும் சேர்க்க, 29.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.