
வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இரு அணி வீரர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது வரும் நாளை (ஜூலை 10ஆம்) புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்திய அணியில் கஸ் அட்கின்ஸன் மற்றும் ஜேமி ஸ்மித் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முன்னாள் வீரார் மஹெலா ஜெயவர்தனே மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஷிவ்நைரன் சந்தர்பால் ஆகியோருடைய வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது இங்கிலாந்து அணிக்காக 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 11, 736 ரன்களை குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 10ஆம் இடத்தில் உள்ளார்.