சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்தாண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கயத்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் அதன்பின் 5 மாதங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் விலகி வந்தார். மேற்கொண்டு எந்தவொரு போட்டிகளிலும் விளையாடமால் அவர், தற்போது காயத்தில் இருந்து மீண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு இந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுக வீரர்கள் சாம் குக் மற்றும் ஜோர்டன் காக்ஸ் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து அணியின் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், கஸ் அட்கின்சன், ஒல்லி போப் ஆகியோருடன் ஸாக் கிரௌலி, சோயப் பசீர், ஜேமி ஸ்மித் உள்ளிட்டோரும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். அதேசமயம் இத்தொடருக்கான ஜிம்பாப்வே அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில், இங்கிலாந்தின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஒரு சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ஜோ ரூட் 28 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 13ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வர். இதன்மூலம் இந்த மைல் கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் மற்றும் உலகளவில் 5ஆவது வீரர் எனும் பெருமையையும் ஜோ ரூட் பெறவுள்ளார்.
இதற்கு முன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதிய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், தென் ஆப்பிரிக்காவின் ஜேக்ஸ் காலிஸ் ஆகியோர் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13ஆயிரம் ரன்களை அடித்துள்ளனர். அதேசமயம் ஜோ ரூட் இதுவரை 152 டெஸ்ட் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 50.87 சராசரியுடன் 12972 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 பேட்ஸ்மேன்கள்
- சச்சின் டெண்டுல்கர் - 15921 ரன்கள்
- ரிக்கி பாண்டிங் - 13378 ரன்கள்
- ஜாக் காலிஸ் - 13289 ரன்கள்
- ராகுல் டிராவிட் - 13288 ரன்கள்
- ஜோ ரூட் - 12972 ரன்கள்
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாம் குக், ஜேம்ஸ் ரீவ், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங்.
Also Read: LIVE Cricket Score
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின், பிரையன் பென்னட், பென் கரண், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, வெலிங்டன் மசகட்சா, பிளெஸிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நியுச்சி, சிக்கந்தர் ராசா, தஃபத்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now