
ICC Test Rankings: ஐசிசி சார்பில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் என 3 பிரிவுகளாக தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் பல்வேறு ஆச்சரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், நம்பர். 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதங்களை விளாசி அசத்தினார். மேலும் அலெக்ஸ்டர் குக்கிற்கு அடுத்ததாக 10,000 டெஸ்ட் ரன்களை கடந்த 2ஆவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
இதன் மூலம் ஜோ ரூட் 897 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். 2ஆவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் லபுசாக்னே 892 புள்ளிகளுடன் இருக்கிறார். இவர்களை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் என இருக்கின்றனர். இந்திய வீரர் விராட் கோலி 10ஆவது இடத்தில் உள்ளார்.