
Joe Root Records: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 38ஆவது சதத்தைப் பதிவுசெய்து பல்வேறு சாதனைகளை உடைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது 433 ரன்களைக் குவித்து விளையாடி வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து விளையாடி வருகிறார். தற்போது ஜோ ரூட் 121 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 36 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து அசத்தியுள்ளார்.