
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஜோ ரூட் 37 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்காலையும், பென் டக்கெட் 24 ரன்களையும், ஜோஸ் பட்லர் 21 ரன்கலையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 179 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற ரியான் ரிக்கெல்டன் 27 ரன்களிலும் என அடுத்தடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 47 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.