Advertisement

ஜோஃப்ரா ஆர்ச்சர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - ஜோஸ் பட்லர்!

ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் தனது முழு உடற்தகுதியுடன் திரும்பி வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

Advertisement
ஜோஃப்ரா ஆர்ச்சர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - ஜோஸ் பட்லர்!
ஜோஃப்ரா ஆர்ச்சர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் - ஜோஸ் பட்லர்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 22, 2024 • 02:53 PM

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 22, 2024 • 02:53 PM

அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது லீட்ஸில் உள்ள ஹெடிங்க்லே கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Trending

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருபெரும் வலிமை வாய்ந்த அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இதனையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் காயம் காரணமாக ஓராண்டுக்கு மேல் இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் கம்பேக் கொடுக்கவுள்ள நிலையில் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், “ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் தனது முழு உடற்தகுதியுடன் திரும்பி வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தனது பந்துவீச்சில் கூடுதல் பயிற்சி மேற்கொண்டு திரும்பி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சில மாதங்களாக அவர் சர்வதேச கிரிக்கெட்டை எவ்வளவு தவறவிட்டார் என்பது எனக்கு தெரியும். 

மேலும் அவர் தற்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறார், அதை எவ்வாறு நிர்வகிப்பது என்று மருத்துவக் குழு ஆலோசனைகளை கூறியுள்ளனர். முடிந்தவரை அவர் இத்தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று நம்புகிறேன். அவர் காயம் காரணமாக நிறைய கிரிக்கெட்டைத் தவறவிட்டாலும், தற்போது திரும்பி வந்து எங்கள் அணியின் ஒரு அங்கமாக இருக்க ஆசைப்படுகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement