Advertisement

டி20 பிளாஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ஆர்ச்சர்!

இந்த மாதம் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

Advertisement
Jofra Archer targets T20 Blast comeback after injury nightmare
Jofra Archer targets T20 Blast comeback after injury nightmare (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2022 • 08:34 PM

கடந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் 2021 போட்டியிலிருந்தும் விலகினார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 06, 2022 • 08:34 PM

பிறகு, முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகினார். கடந்த மே மாதம் முழங்கை காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர் ஆகிய முக்கியமான போட்டிகளிலிருந்து அவர் விலகினார். 

Trending

டிசம்பர் 11 அன்று முழங்கை காயத்துக்கு மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ஆர்ச்சர். இதையடுத்து இங்கிலாந்து அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திலும் ஆர்ச்சர் இடம்பெறவில்லை. 

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி ஆர்ச்சரைத் தக்கவைக்கவில்லை. 2ஆவது அறுவை சிகிச்சை காரணமாக ஐபிஎல் 2022 போட்டியில் ஆர்ச்சர் பங்குபெறுவாரா என்கிற சந்தேகம் இருந்தது. ஐபிஎல் ஏலத்தில் ரூ. 8 கோடிக்கு ஆர்ச்சரைத் தேர்வு செய்தது மும்பை அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆர்ச்சர் விளையாடாமல் போனாலும் அடுத்த வருடம் விளையாடவுள்ளார்.

மீண்டும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்புவது பற்றி டெய்லி மெயில் ஊடகத்திடம் ஆர்ச்சர் கூறுகையில், “பல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதால் மீண்டும் விளையாட வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியுமா என்றும் சந்தேகப்பட்டேன். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எனக்கு உறுதியையும் மனநிம்மதியையும் அளித்தது. 

நான் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றார்கள்.  இங்கிலாந்து அணியுடனான ஒப்பந்தத்தை இழந்து விடுவேன் என எண்ணினேன். இப்போது எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றி இப்போது எதுவும் நான் யோசிக்கவில்லை. டி20 பிளாஸ்ட் போட்டியில் நான் விளையாட வேண்டும். 

அதில் நான் ஒழுங்காக விளையாடா விட்டால் என்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. டி20 உலகக் கோப்பை வரப்போகிறது எனத் தெரியும். அதில் கலந்துகொண்டு நன்றாக விளையாட வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement