
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் இப்போட்டியில் ரன்களைக் குவிக்க தவறிய போதிலும், ஒரு சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
அதன்படி இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஜோஸ் பட்லர் இந்தியாவில் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மொத்தமாக 563 ரன்களை எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்களும் அடங்கும். முன்னதாக இந்தப் பட்டியலில், ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியை இந்திய மண்ணில் 25 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 556 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர்
- ஜோஸ் பட்லர்(இங்கிலாந்து) - 20 டி20 போட்டிகளில் 563 ரன்கள்
- முகமது நபி (ஆஃப்கானிஸ்தான்) - 25 டி20 போட்டிகளில் 556 ரன்கள்
- குயின்டன் டி காக்(தென் ஆப்பிரிக்கா) - 12 டி20 போட்டிகளில் 458 ரன்கள்
- கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 14 டி20 போட்டிகளில் 445 ரன்கள்
- முகமது ஷாசாத்(ஆஃப்கானிஸ்தான்)- 13 டி20 போட்டிகளில் 435 ரன்கள்