
சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா மற்றும் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். அதன்படி இப்போட்டியில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த பட்லர் 30 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள்
இந்த இன்னிங்ஸின் போது, ஜோஸ் பட்லர் சர்வதேச டி20 போட்டிகளில் தனது 150 சிக்ஸர்களை அடித்தார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 சிக்ஸர்களை வீழ்த்திய இங்கிலாந்தின் முதல் வீரர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பட்லர் இதுவரை 131 போட்டிகளில் 120 இன்னிங்ஸ்களில் 151 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவருக்கு முன்பு, ரோஹித் சர்மா, மார்ட்டின் கப்தில் மற்றும் முகமது வாசிம் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையைச் செய்துள்ளனர்.