
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனாது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் மற்றும் பாபர் ஆசாம் இணை அதிரடியாக விளையாடி ஆணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களைத் தாண்டியது. அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 10 பவுண்டரிகளுடன் 81 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன்பின் மறுபக்கம் சதமடித்து விளையாடி வந்த ஷான் மசூத் 145 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 478 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், 58 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 8.1 ஓவர்களில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 10 விக்கெட் வித்தியாசத்த்ல் பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.