பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ இதனை செய்ய வேண்டும் - முகமது கைஃப்!
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் படுதோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. இந்த தோல்வியின் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ள இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைகக்ப்பட்டாலும், பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தனது ஆதிக்கத்தை செலுத்தி அசத்தியுள்ளார். குறிப்பாக இத்தொடரில் பும்ரா விளையாடிய 5 போட்டிகளிலும் சேர்த்து 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதுடன், தொடர்நாயகன் விருதையும் வென்றார். அதிலும் குறிப்பாக சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் பும்ரா முதுகு வலியால் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
Trending
அதனால் கடைசி இன்னிங்ஸில் பும்ராவால் பந்துவீச முடியவில்லை. ரோஹித் சர்மா தலைமையில் அனைத்து போட்டிகளும் தோல்வியுற்ற இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக பும்ரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த தொடரிலேயே ரோஹித் சர்மா இல்லாத சமயங்களில் ஜஸ்பிரித் பும்ரா அணியின் கேப்டனாக செயல்பட்டதுடன், அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கைஃப், “ஜஸ்பிரித் பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில் அவர் தற்போது விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், உடற்தகுதியை பராமரிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
மாறாக அவர் கேப்டனாக பதவியேற்றால் தலைமை பண்பை கட்டுவதுடன், அவசர காலங்களில் அதிகமாகச் செயல்படுவதும் காயங்களுக்கு வழிவகுக்கும். அதனால் கேப்டன் எனும் கூடுதல் பொறுப்பைக் கொடுத்து அவருக்கு காயம் ஏற்படுத்தி விடாதீர்கள். தங்க முட்டையிடும் வாத்தை கொன்றுவிடாதீர்கள். அதற்கு பதிலாக ரிஷப் பந்த் அல்லது கேஎல் ராகுலை அணியின் கேப்டனாக நியமிக்கலாம். அவர்களுக்கு ஐபிஎல் அணியை வழிநடத்திய அனுபவமும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவியேற்றால் ஆச்சரியப்படப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஜஸ்பிரித் பும்ராவை முழுநேர கேப்டனாக நியமிப்பதற்கு முன் பிசிசிஐ இருமுறை யோசிக்க வேண்டும் என முகமது கைஃப் தெரிவித்துள்ளதால் இதில் யாரது கூற்று சரியாக இருக்கும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now