
Kamindu Mendis in Test: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடந்ததன் மூலம் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் முஷ்ஃபிக்கூர் ரஹிம் அகியோர் அபாரமான ஆட்டத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 495 ரன்களைக் குவித்தது. இதில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 148 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 163 ரன்களையும், லிட்டன் தாஸ் 90 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 187 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 87 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 54 ரன்களையும் சேர்த்ததன் காரணமாக முதல் இன்னிங்ஸில் அந்த அணி 485 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதனையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.