ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே 2 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 34 ரன்னும் எடுத்தும் விக்கெட்டை இழந்தனர்.
அதேசமயம் இப்போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்றாம் வரிசையில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதியதுடன் 93 ரன்னில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பினைத் தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் 19, டாம் பிளெண்டல் 17, நாதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
Trending
இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் - டிம் சௌதி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களைக் குவித்துள்ளது.இதில் கிளென் பிலீப்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களையும், டிம் சௌதீ 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஷொயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 93 ரன்னில் விக்கெட்டை இழந்ததன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார். அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிகமுறை 90 ரன்களில் விக்கெட்டை இழந்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.
Most Dismissals in 90s (Intl Cricket)
27 - Sachin Tendulkar
13 -
12 - Rahul Dravid
12 - AB de Villiers
11 - Matthew Hayden
11 - Ricky Ponting
10 - Virender Sehwag
10 - Shikhar Dhawan#NZvsENG pic.twitter.com/TZ5my6YxHd— (@Shebas_10dulkar) November 28, 2024முன்னதாக இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் தலா 12 முறை 90களில் விக்கெட்டை இழந்து இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்ட நிலையில், தற்சமயம் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 13 முறை 90களில் ஆட்டமிழந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியளில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 27 முறை 90களில் ஆட்டமிழந்து முதலிடத்தில் உள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் கேன் வில்லியம்சன் 5ஆவது முறையாக 90களில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம், கடந்த ஆறு ஆண்டுகளில் டெஸ்டில் கேன் வில்லியம்சன் 90 முதல் 99 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், இந்திய அணியின் ராகுல் டிராவிட், இந்திய் அணியின் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 10 முறை 90களில் ஆட்டமிழந்து முதலிடத்தில் உள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now