IND vs NZ: மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகினார் கேன் வில்லியம்சன்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் கேன் வில்லியம்சன் விலாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்தும் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இருந்தும் வில்லியம்சன் விலகினார். இதன் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் வில் யங் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது கேன் வில்லியம்சன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்போட்டியில் இருந்தும் அவர் விலகியுள்ளது அணிக்கு பின்னடவைவாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு திரும்புவார் என அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இதுவரை 102 போட்டிகளில் விளையாடி 32 சதங்கள், 35 அரைசதங்கள் என 8,881 ரன்களைக் குவித்துள்ளார். மேற்கொண்டு ஐசிசியின் டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையிலும் இரண்டாம் இடத்தில் இருக்கும் கேன் வில்லியம்சன், இப்போட்டியில் விளையாடாதது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் மட்டும்), டிம் சௌதீ, கேன் வில்லியம்சன், வில் யங்
Win Big, Make Your Cricket Tales Now