1-mdl.jpg)
கிரிக்கெட்டில் பந்துவீச்சு முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாக க்ரீஸை விட்டு நகர்ந்தால் ரன் அவுட் செய்யலாம். அதற்கு மன்கட் ரன் அவுட் என்று பெயர். இந்த மன்கட் ரன் அவுட் விதிப்படி சரிதான் என்றாலும், தார்மீக ரீதியில் தவறு என்கிற வகையில் பந்துவீச்சாளர்கள் பெரிதாக இந்தவிதத்தில் ரன் அவுட் செய்வதில்லை.
ஆனால் ஐபிஎல்லில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோஸ் பட்லரை மன்கட் ரன் அவுட் செய்தபோது தான் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அது பெரும் விவாதப்பொருளாகவும் ஆனது. அதன்பின் சில வீரர்கள் மன்கட் ரன் அவுட் செய்தனர். ஒவ்வொரு முறை மன்கட் ரன் அவுட் செய்யப்படும்போதும் பெரும் விவாதமே நடக்கும்.
அதை தடுக்கும் வகையில், மன்கட் ரன் அவுட்டை முறையான ரன் அவுட் என்று விதியை மாற்றியது எம்சிசி. அதனால் விதிப்படி அந்த ரன் அவுட் செல்லும். எம்சிசி அந்த ரன் அவுட்டை அதிகாரப்பூர்வ ரன் அவுட் என்று அங்கீகரித்த பின்பும் கூட, அந்த ரன் அவுட் சர்ச்சையாகவே உள்ளது.