Deepti sharma run out
தீப்தி சர்மா விதிகளை மீறி எதையும் செய்யவில்லை - சச்சின் டெண்டுல்கர்!
கடந்த மாதம் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் அந்த அணி வீராங்கனை சார்லி டீன் பந்து வீசுவதற்கு முன்பாகவே எதிர்ப்புறமிருந்து வெள்ளை கோட்டை விட்டு வெளியேறியதால் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சையாக நிலவுகிறது. ஆரம்ப காலம் முதலே நடைமுறையில் இருந்து வரும் இவ்வகையான அவுட் ஒருமுறை இந்திய வீரர் வினோ மன்கட் செய்ததிலிருந்து பிரபலமாகி அவரது பெயரோடு அழைக்கப்பட்டதுடன் நேர்மைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டு வந்தது.
ஏனெனில் தனது பார்ட்னர் பேட்ஸ்மேனை பார்த்துக்கொண்டே பெரும்பாலான சமயங்களில் தங்களை அறியாமல் வேகமாக சிங்கிள் எடுப்பதற்காக எதிர்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் பவுலர் பந்து வீசுவதற்கு முன்பாகவே கோட்டை விட்டு வெளியேறுவார்கள். அப்போது கவனம் பந்து வீச்சாளர் மேல் இல்லாமல் எதிர்ப்புறம் இருப்பதால் பவுலர் ரன் அவுட் செய்வதை அனைவரும் நேர்மைக்குப் புறம்பானதாக பார்க்கிறார்கள். ஆனால் நியாயப்படி பவுலர் ஒரு இன்ச் காலை வெளியே வைத்தாலும் உடனடியாக நோ-பால் வழங்கி அதற்கு தண்டனையாக பிரீ ஹிட் கொடுக்கப்படும் போது பேட்ஸ்மேன்கள் மட்டும் அப்படி ஒரு விதிமுறை இல்லாதது போல் முன்கூட்டியே வெளியேறி ரன் எடுப்பதற்கான சாதகத்தை உருவாக்கிக் கொள்வதாக தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருதினார்.
Related Cricket News on Deepti sharma run out
-
தீப்தி சர்மா ரன் அவுட் விவகாரம்; ஹர்ஷா போக்லே கருத்துக்கு ஸ்டோக்ஸ் பதில் கருத்து!
கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த பென் ஸ்டோக்ஸின் பதிவு சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சைக் கிளப்பியுள்ளது. ...
-
மான்கட் விசயத்தில் தீப்தி சர்மாவுக்கு ஆதரவு கொடுக்கும் எல்லிஸ் பெர்ரி!
சர்வதேச கிரிக்கெட்டில் மான்கட் விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
தொடரும் மான்கட் ரன் அவுட் சர்ச்சை; ஐடியா கூறிய கபில் தேவ்!
மன்கட் ரன் அவுட் ஒவ்வொரு முறையும் சர்ச்சையாகும் நிலையில், அதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கபில் தேவ் ஒரு தீர்வு கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago