இந்திய சீனியர் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கபில்தேவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான கோலி, ரோஹித் மற்றும் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரக்காவுக்கு எதிரான 5 டி20 போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட கபில்தேவ், இளம் வீரர்களால் சீனியர்களுக்கு அணியில் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எப்போது எல்லாம் ரன் அடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறதோ, அப்போது இந்த மூன்று வீரர்களும் அவுட்டாகி விடுவதாக கபில்தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Trending
மூன்று வீரர்களுக்குமே பெரிய பெயர், இமேஜ் உள்ளன. இதனால் மன்று வீரர்களுக்குமே பெரிய அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறத. ஆனால், இதை ஒரு காரணமாக வைத்து சரியாக விளையாடமால் இருக்க கூடாது. மூன்று சீனியர்களுமே பயமின்றி விளையாட வேண்டும். 3 பேருமே 150 முதல் 160 ஸ்ட்ரைக் ரேட் வைத்து விளையாட தெரியும்.
ஒன்று ஆன்கர் ரோலில் விளையாட வேண்டும், இல்லை அதிரடியாக ஆட வேண்டும். ராகுல் 20 ஓவர் வரை நின்ற விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறி, அதன் படி அவர் 20 ஓவர் வரை நின்று 60 ரன்கள் தான் அடித்து இருந்தால் அது எந்த பயனும் தராது. மூன்று வீரர்களும் எந்த பொறுப்பை ஏற்று விளையாட வேண்டம் என்பதை அணி நிர்வாகம் முன்கூட்டியே அவர்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும்.
அப்படியும் 3 பேரும் சொதப்பினால் மாற்று வீரர்களை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். பெரிய வீரர்கள் என்ற பெயர் மட்டும் இருந்தால் போதாது. பெரிய வீரர்கள் என்றால் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பெரிய ரன்களை அடிக்க வேண்டும். இவர் பெரிய வீரர் என்ற பெயர் இருந்தால் மட்டும் போதாது என்று கபில்தேவ் கூறியிருந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now