
Karun Nair Injured: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கருண் நாயர் வலைபயிற்சியின் போது கயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடியேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்க்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜூன் 20)நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலியில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்றையை தினம் அறிவிக்கப்பட்டது.
அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்தெ வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்விகளும், சந்தேகங்களும் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஏழாண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றுள்ள கருண் நாயருக்கு இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா, அப்படி வாய்ப்பு கிடைத்தால் அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.