
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ள நிலையில் பல அணிகளும் தங்களது டி20 அணியை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணிக்கு உலக கோப்பையை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஆனால் டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக வெறும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தான் விளையாடுகிறது. எனினும் மார்ச் முதல் ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் விளையாடுவதால் அது கூடுதல் பயிற்சியாக இருக்கும் என இந்திய அணி நிர்வாகம் நினைக்கிறது.
இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணி தற்போது உலக கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் சுற்றுலே தோல்வியை தழுவி இங்கிலாந்து அணி பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதனால் இழந்த பெருமையை மீட்கும் வகையில் இங்கிலாந்து புது கணக்கு போட்டுள்ளது.