
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஐடன் மார்க்ரம் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு அவருடன் இணைந்துள்ள நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.
பின்னர் 76 ரன்களில் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிக்கோலஸ் பூரனும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேவிட் மில்லர் 28 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.