
KL Rahul Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் சதமடித்து அசத்தியதன் மூலம் சிறப்பு சதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 56 ரன்களையும், ஜேமி ஸ்மித் 51 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பும் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களைச் சேர்த்திருந்தது. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பந்த் 19 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் கேஎல் ராகுல் தனது சதத்தையும், ரிஷப் பந்த் தனது அரைசதத்தையும் பதிவுசெய்திருந்த கையோடு தங்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இப்போட்டின் மூலம் கேஎல் ராகுல் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.