
KL Rahul Becomes Third-Fastest Batter To Reach 2000 Runs In T20Is With A Fifty Against Australia (Image Source: Google)
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 71 ரன்களை குவித்தார். அவரை தவிர்த்து கே.எல் ராகுல் 55 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 46 ரன்களையும் குவித்தனர். பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலியா அணியானது விளையாடியது.
19.2 ஒவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.