
இந்தியா வந்துள்ள தென் ஆப்பாரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. ஐபிஎலில் சிறப்பாக சோபித்த இளம் வீரர்களுக்குத்தான் இடம் வழங்கப்பட்டுள்ளது.
மூத்த வீரர்கள் அடங்கிய இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க, நாளை இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளது. ராகுல் திராவிட், ஸ்ரேயஸ் ஐயர் உட்பட இரண்டாவது இந்திய அணிக் குழு வரும் 20ஆம் தேதி இங்கிலாந்து செல்லும்.
அங்கு சென்றப் பிறகு 24ஆம் தேதி, கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா டெஸ்ட் விளையாடு உள்ளது. அடுத்து ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை, இங்கிலாந்தை எதிர்த்து, ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. ஏற்கனவே, கடந்த ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா காரணமாக ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போட்டியில்தான் இந்திய விளையாட உள்ளது.