
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அசாத்திய திறமையுடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை இந்த உலகக் கோப்பையில் தோல்வி அடையாத அணியாக இந்தியா இருந்து வருகிறது. இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து திரும்பிய பொழுது, அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பது குறித்தான சந்தேகம் இருந்தது.
மேலும் மிக முக்கியமாக கேஎல் ராகுல் உடல் தகுதி மீது பெரிய விவாதங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் காயத்தில் இருந்து திரும்பிய இந்திய வீரர்கள் அனைவரும் ஒரே அணியாக சேர்ந்து, இதுவரை அவர்கள் செயல்பட்டதை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதில் கே எல் ராகுலின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அவரை ஒரு பேட்ஸ்மேன் ஆக எல்லோருக்கும் தெரியும். ஆனால் பேக்கப் விக்கெட் கீப்பராக இருந்தவர், தற்பொழுது முதன்மை விக்கெட் கீப்பர்கள் செயல்படும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் எடுத்த சில கேட்ச்கள் மறக்க முடியாதவை மற்றும் அபாரமானவை.