
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர்களில் ஒருவர் கேஎல் ராகுல். ஆனால் சமீப காலமாக ஃபார்மின்றி தவித்து வரும் அவர், ஐபிஎல் தொடரில் தனது ஃபார்மை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர், காயமடைந்து தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார்.
அதன்பின் அவரது காயம் தீவிரமைடைவே அறுவை சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இடத்தையும் இழந்தார். அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ள அவர் தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இதையடுத்து தனது உடற்தகுதியை மிட்டெடுக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.
அதேபோல் ஆசியக் கோப்பை கிரிக்க்கெட் தொடர் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதனை கவனத்தில் கொண்டு கே.எல்.ராகுல் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒருபகுதியாக அவர் தற்போது பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாதமியில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ಮನೆ pic.twitter.com/0BXpG03kdL
— K L Rahul (@klrahul) June 13, 2023