
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் கடந்த போட்டியில் லக்னோ அணியானது சன்ரைசர்ஸ் அணியிடம் படுதோல்வியைச் சந்திதுள்ளது.
இந்நிலையில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இக்காணொளியானது இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின.
அதன்பின் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காமல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகினர். இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தற்போதுவரை அணியினருடன் இணையவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
As Per Reports, KL Rahul hasn’t travelled to Delhi with the LSG team for their upcoming match against the Delhi Capitals! pic.twitter.com/MXpLemlTaO
— CRICKETNMORE (@cricketnmore) May 13, 2024