
KL Rahul is off the field with a suspected hamstring injury! (Image Source: Google)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 43ஆவது லீக் போட்டி தற்போது லக்னோ மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பாப் டூப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்கினர்.
இதில், போட்டியின் 2ஆவது ஓவரை மார்கஸ் ஸ்டோய்னிஸ் வீசினார். கடைசி பந்தை பாப் டூப்ளெசிஸ் எதிர்கொண்டார். அவர் பந்தை ஆஃப் சைடு திசையை நோக்கி அடிக்கவே, பீல்டிங் செய்து கொண்டிருந்த கேஎல் ராகுல் பவுண்டரியை தடுக்க பின்னாடியே ஓடிய நிலையில், அவரது காலின் தொடைப் பகுதியில் தடைப்பிடிப்பு போன்று ஏற்பட்டுள்ள நிலையில், வலியால் துடித்த அப்படியே மைதானத்திலேயே படுத்துள்ளார்.
Kl Rahul Injured pic.twitter.com/5iDX4Zib68
— TCb Cricket (@ManjuManch83909) May 1, 2023