
டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 4 சூப்பர் 12 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. கிட்டத்திட்ட பாதி காலை அரையிறுதி போட்டிக்குள் வைத்துவிட்டது என்று கூறலாம்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறும் மற்றொரு சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு உறுதி பெற்று விடும். பேட்டிங்கில் இந்திய அணிக்கு சற்று கவலை அளிக்கும் விதமாக இருந்தது கேஎல் ராகுல் ஃபார்ம். முதல் மூன்று போட்டிகளில் 4, 9 மற்றும் 9 ரன்கள் அடித்தார். ஆனால் இவரது பேட்டிங் மீது ரோகித் சர்மா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். இதன் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட வைக்கப்பட்டார்.
அதற்கு நியாயம் சேர்க்கும் விதமாக அதிரடியாக விளையாடி 51 ரன்கள் அடித்தார். மீண்டும் ஃபார்மிற்கு திரும்பி இருப்பதால் அணி நிர்வாகம் இவர் மீது நம்பிக்கையை பெற்றிருக்கிறது. கேஎல் ராகுல் தனது இதே பார்மை தொடர்ந்தால் இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என்று தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார் கவுதம் கம்பீர்.